முட்டை வெள்ளைக் கரு றோஸ்ட்

Navas Banu
Navas Banu @cook_17950579

# முட்டை உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 8அவித்த முட்டை
  2. 1 டீ ஸ்பூண்இஞ்சி விழுது
  3. 1 டீ ஸ்பூண்பூண்டு விழுது
  4. 2வெங்காயம் சிறிதாக நறுக்கியது
  5. 2தக்காளி சிறிதாக நறுக்கியது
  6. 1பச்சை மிளகாய் நறுக்கியது
  7. 1/4 டீ ஸ்பூண்மஞ்சள் பொடி
  8. 2 டீஸ்பூண்மிளகாய் பொடி
  9. 1 1/2 டீ ஸ்பூண்பெருஞ்சீரகப் பொடி
  10. 1 டீ ஸ்பூண்பெப்பர் பொடி
  11. 1 டீ ஸ்பூண்கரம் மஸாலா பொடி
  12. தேவைக்குஉப்பு
  13. 3 டேபிள் ஸ்பூண்எண்ணெய்
  14. கொஞ்சம்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை அவித்து தோடையும், மஞ்சள் கருவையும் நீக்கி விட்டு வெள்ளைக் கருவை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

  3. 3

    இஞ்சி, பூண்டு விழுதுகள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் நறுக்கியது,பச்சை மிளகாய் நறுக்கியது சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் வதங்கி வரும் போது தக்காளி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    தக்காளி வதங்கியதும்,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,பெருஞ்சீரகப் பொடி,பெப்பர் பொடி, கரம் மஸாலா பொடி எல்லாப் பொடிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  7. 7

    தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  8. 8

    பச்சை மணம் மாறியதும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி மூடி வைத்து கொதிக்க விடவும்.

  9. 9

    நன்றாக கொதித்ததும் முட்டையின் வெள்ளைக் கருவை ச் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  10. 10

    தண்ணீர் வற்றி, மஸாலா இறுகி வெள்ளைக் கருவில் பொதிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

  11. 11

    வித்தியாசமான சுவையில் முட்டை வெள்ளைக்கரு றோஸ்ட் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes