முருங்கைக்காய் மட்டன் பால்ஸ் கிரேவி

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 400 கிராம்கொத்திய மட்டன் கறி
  2. நான்குமுருங்கைக்காய்
  3. நான்கு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  4. ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  5. ஒரு ஸ்பூன்ம.தூள்
  6. தே.அளவுஉப்பு
  7. தே.அளவுஎண்ணெய்
  8. மூன்று டே.ஸ்பூன்கறி மசாலா தூள்
  9. அரை மூடிதேங்காய்
  10. பெ.வெங்காயம் இரண்டு
  11. ஒன்றுதக்காளி
  12. இரண்டுப.மிளகாய்
  13. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொத்திய மட்டனை கழுவி நீரை வடித்து ஒரு பெ.வெங்காயம்.ஒரு ப.மிளகாய்.ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.உப்பு.ஒரு கைப்பிடி தே.துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்துஎடுக்கவும்.

  2. 2

    அரைத்த கறி விழுதை உருண்டைகளாக உருட்டி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இலேசாக பொரித்து தனியே வைக்கவும்..

  3. 3

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஒரு வெங்காயப்.ப.மிளகாய்.ஒரு தக்காளி.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதில் மீதி இஞ்சி.பூணாடு விழுது.மி.தூள்.ம.தூழ்.உப்பு சேர்த்து கிளறவும்.

  5. 5

    அநில் முருங்கைக்காய்களை துண்டுகளாக்கி சேர்த்து கறி மசாலா உப்பு சேர்த்து இலேசாக பொரித்த கறி உருண்டைகளையும் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.

  6. 6

    முருங்கைக்காய்..கறி உருண்டைகள் நன்கு வெந்ததும் அரை மூடி தேங்காயில் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து திக்கான தே.பால் முக்கால் கப் ஊற்றி சிறு தீயில் வைத்து கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes