முருங்கைக்காய் ஸில்க்கி கறி

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3முருங்கைக்காய்
  2. 5தக்காளி
  3. 1 1/2 கப்தேங்காய் துருவல்
  4. 6முந்திரிப்பருப்பு
  5. 1 டேபிள் ஸ்பூண்இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2 டீ ஸ்பூண்மஞ்சள் பொடி
  7. 2 ஸ்பூண்மிளகாய் பொடி
  8. 1 டேபிள் ஸ்பூண்மல்லிப்பொடி
  9. 1/2 டீ ஸ்பூண்கரம் மஸாலாப் பொடி
  10. 1 1/2 கப்தண்ணீர்
  11. கொஞ்சம்கறிவேப்பிலை
  12. தாளிக்க
  13. 2 டேபிள் ஸ்பூண்தேங்காய் எண்ணெய்
  14. 1/2 டீ ஸ்பூண்கடுகு
  15. 1 டீ ஸ்பூண்ஜீரகம்
  16. கொஞ்சம்கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    தக்காளியை மிக்ஸி ஜாரில் அடித்து பியூரி ஆக்கிக் கொள்ளவும்.

  3. 3

    தேங்காயையும், முந்திரிப்பருப்பையும் வடிய அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு நான் ஸ்டிக் பேன் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும.கடுகு பொட்டியதும் ஜீரகம் சேர்க்கவும்.

  5. 5

    ஜீ‌ரகம் நன்றாக பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

  6. 6

    கறிவேப்பிலை பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  7. 7

    இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் தக்காளி பியூரியை சேர்த்து நன்கு வதக்கவும்.

  8. 8

    எண்ணெய் பிரிந்து வரும் போது முருங்கைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

  9. 9

    தக்காளியும், முருங்கைக்காயும் சேர்ந்து வெந்து, தக்காளி பியூரி திக்கான ஒரு சட்னி பருவத்தில் வரும் போது உப்பு சேர்த்து கொடுக்கவும்.

  10. 10

    தக்காளியும், முருங்கைக்காயும் நன்கு வதங்கி பச்சை மணம் மாறி வரும் போது, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி,மல்லிப்பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கி விட்டு தண்ணீர் சேர்க்கவும்.

  11. 11

    மஸாலா நன்கு கொதித்து முருங்கைக்காய் வெந்து கிரேவி திக்கானதும், அரைத்த தேங்காய் முந்திரி பருப்பு விழுதைச் சேர்க்கவும்.

  12. 12

    தேவைக்கு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.கிரேவி திக்காகி வரும் போது, பச்சை கறிவேப்பிலை தூவி மிக்ஸ் பண்ணி இறக்கவும்.மிகவும் சுவையான, மணமான முருங்கைக்காய் ஸில்க்கி கறி ரெடி.இந்த கறியை ஆப்பம்,இட்லி,இடியப்பம் இவைகளுடன் சாப்பிடலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes