சுட்ட தக்காளித் தொக்கு

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4தக்காளி
  2. 10 பல்பூண்டு
  3. 1வெங்காயம் மீடியம் சைஸ்
  4. 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 3வற்றல் மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளியை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவும்.இதனுடன் பூண்டு பற்களையும் சேர்த்து மூடி வைத்து ஹை ஃப்ளேமில் வேக வைக்கவும்.

  3. 3

    ஒரு பக்கம் ஃப்ரை ஆனதும் தக்காளியையும், பூண்டையும் மறித்து போடவும்.

  4. 4

    தக்காளியும், பூண்டும் நன்றாக ஃப்ரை ஆகி கோல்டன் ப்ரவுன் கலரில் ஆகி வரும் போது எண்ணெயில் இருந்து கோரி எடுத்து ஆற வைக்கவும்.

  5. 5

    அதே பேனில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

  6. 6

    அதே பேனில் மீதமுள்ள எண்ணெயில் மூன்று வற்றல் மிளகாயையும் நன்றாக பொரித்து எடுக்கவும்.

  7. 7

    தக்காளி ஆறியதும் அதன் தோலை உரித்து மாற்றவும்.

  8. 8

    ஒரு பாத்திரத்தில் பொரித்த வற்றல் மிளகாயை போட்டு கை வைத்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

  9. 9

    இதனுடன் தோல் நீக்கிய தக்காளியையும், பூண்டையும் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

  10. 10

    பிறகு இதனுடன் வதக்கிய வெங்காயத்தையும், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மசித்து எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes