புது விதமாக வித்யாசமான முறையில்"ஸ்பைஸி கத்திரிக்காய் தொக்கு"

சமையல் குறிப்புகள்
- 1
நல்லெண்ணெய்-6டீஸ்பூன்,3மீடீயம் சைஸ் வெங்காயம்.
பழுத்த தக்காளி பழம்-5.
மஞ்சள் தூள்-1/2டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள்-2டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி(தனியா) தூள்-2டேபிள் ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
- 2
காய்ந்த நீள சிவப்பு மிளகாய்-2.
பச்சை மிளகாய்-2.
புளி-சிறிதளவு.
இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்.
கொத்தமல்லிதள இலை-1கை பிடி.
வெங்காயம் & வேக வைத்த தக்காளி பழத்தை தோல் உறித்து மிக்ஸி ஜாரில் பேஸ்ட் போன்று அரைக்கவும். - 3
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு மூடி வைத்து அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து 5 தக்காளி பழத்தை 5நிமிடம் கொதிக்க வைத்து.சூடு ஆறிய பின் தோல் உறிக்கவும்.
- 4
பின் சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு மூடி வைத்து அரைக்கவும்.
சிறிதளவு புளியை 5நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 5
ஊற வைத்த புளியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வடி கட்டி 1/2டம்ளர் புளி தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
மீடியம் சைஸ் கத்திரிக்காயை இரண்டாக வெட்டி.ஒவ்வொரு பாதி பாகத்தையும் மூன்றாக நீளமாக வெட்டி.கியூப் வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊர வைக்கவும்.கத்திரிக்காய் நிறம் கருக்காமல் இருக்கும்.
- 6
4டீஸ்பூன் பாமாயில் ஒரு பான்-ல் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு வெட்டி வைத்த கத்திரிக்காயை போட்டு தேவையான அளவு உப்பு தூள் தூவி கொள்ளுங்கள்.மீடியமாக பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
பின் தனியாக ஒரு பவுளில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 7
3வெங்காயம் பேஸ்ட், 5தக்காளி பியூரி,நல்லெண்ணெய்-6டீஸ்பூன்,இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்,மிளகாய் தூள்-2டேபிள் ஸ்பூன்,மஞ்சள் தூள்-1/2டேபிள் ஸ்பூன்,கொத்தமல்லி(தனியா)தூள்-2டேபிள் ஸ்பூன்.உப்பு தேவையான அளவு.
தண்ணீர்-1/2டம்ளர்.
புளி தண்ணீர்-1/2 டம்ளர்.
2பச்சை மிளகாய்.
1கை பிடி கொத்தமல்லி தள இலை.
தாளிப்புக்கு கருவேப்பிலை-2கொத்து.
காய்ந்த நீள சிவப்பு மிளகாய்-2. எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும். - 8
அலுமினியம் பாத்திரத்தில் 6டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பிறகு காய்ந்த நீள சிவப்பு மிளகாயை இரண்டாக உடைத்து பின் 2கொத்து கருவேப்பிலையை போட்டு தாளித்த பின்.
வெங்காயம் பேஸ்ட்-ஐ 2 அல்லது 3நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும்.
பின் 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும். - 9
பின் அரைத்து வைத்த தக்காளி பியூரியை ஊற்றி.2பச்சை மிளகாயை இரண்டாக உடைத்து போட்டு கிளரி 2நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பின் மஞ்சள் தூள்-1/2டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள்-2டேபிள் ஸ்பூன்,கொத்தமல்லி(தனியா) தூள்-2டேபிள் ஸ்பூன்-,உப்பு தேவையான அளவு போட்டு கிளறி.1/2டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளரவும்.
- 10
பின் குறைந்த தீயில் வைத்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை 5நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
பின் பொன் நிறமாக வறுத்து வைத்த கத்திரிக்காயை போட்டு.கரைத்து வைத்த 1/2டம்ளர் புளி தண்ணீரை சேர்க்கவும்.
- 11
பின் கொத்தமல்லி தள இலைகள் போட்டு 5நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
இறுதியாக கொத்தமல்லி தள இலைகள் போட்டு இறக்கவும்.
- 12
செய்து வைத்த "ஸ்பைசி கத்திரிக்காய் தொக்கு" ஒரு பவுளில் மாற்றி கொத்தமல்லி தள இலைகள் தூவி பரிமாறி சுவைத்து பாருங்கள்...
புது விதமாக வித்தியாசமான முறையில் "ஸ்பைஸி கத்திரிக்காய் தொக்கு"தயார் செய்து சுவைத்து பாருங்கள்......
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்திரிக்காய் தொக்கு


ஸ்பெஷல் "கொடுவா கருவாடு தொக்கு"


*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*


ஸ்பைஸி சிக்கன் கிரேவி


கத்திரிக்காய் பஜ்ஜி


மஞ்சள் மிளகு பால்


"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3


ஸ்பைஸி டமேட்டோ தொக்கு


பூண்டு குழம்பு


முட்டை கொத்து இடியாப்பம்


கத்திரிக்காய் சுட்டு பிசைந்த குழம்பு


கோபி மஞ்சூரியன்


*கத்தரிக்காய் தொக்கு*


நெய் மீன் பிரியாணி


சுட்ட தக்காளித் தொக்கு


முட்டை தொக்கு


"பச்சை மொச்சைக்காய் குழம்பு"..


தக்காளி தொக்கு


ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி


மிளகு ரசம்


பரோட்டா சால்னா


நெத்திலி கருவாட்டு தொக்கு


முட்டை தொக்கு


*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*


கத்திரிக்காய் சாதம் /Vangibath


"பாசிப்பயறு பசலைக்கீரை மசாலா கூட்டு"


புளிக்கறி


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*


எண்ணை கத்திரிக்காய் குழம்பு


ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)

கமெண்ட்