சைனீஸ் முட்டை கேபேஜ்(முட்டைக்கோஸ்)ஆம்லெட் க

Afra bena
Afra bena @cook_20327268

#book #goldenapron3 7வது வாரம்
Chinese egg cabbage cake
குழந்தைகளுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து புதுவிதமாக செய்து குடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டைக்கோஸ் -1/2கப்
  2. முட்டை -4
  3. தக்காளி -1
  4. பெருஞ்சீரகத்தூள்-1/2டீஸ்பூன்
  5. மிளகுதூள்-1/2டீஸ்பூன்
  6. உப்பு -தேவைக்கேற்ப
  7. மைதா மாவு-1டேபிள் ஸ்பூன்
  8. சில்லிஃப்ளேக்ஸ்
  9. பச்சை மிளகாய் -1

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டைக்கோஸ் -ஐ பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸ் -ஐ சேர்க்கவும். பெருஞ்சீரகத்தூள், மிளகுதூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    பின் 4 முட்டையை உடைத்து சேர்த்து கலக்கி கொள்ளவும். அதனுடன் மைதா மாவு, சில்லிஃப்ளேக்ஸ் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் தவா வைத்து முட்டை கலவையை பாதி ஊற்றவும்.அதேபோல் மற்றொரு அடுப்பிலும் தவா வைத்து பாதி கலவையை ஊற்றி கொள்ளவும்.

  5. 5

    சிறிது எண்ணெய் விட்டு கொள்ளவும். நன்றாக ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு வேகவிடவும. பின் அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வேகவிட்டு இறக்கவும்.

  6. 6

    சுவையான சைனீஸ் முட்டை முட்டைக்கோஸ் ஆம்லெட் கேக் தயார். சாஸுடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes