எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மீன் பொரித்து எடுக்க ::
  2. மீன்
  3. மிளகாய் தூள்-1/4டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
  5. மல்லித்தூள்-1/4டீஸ்பூன்
  6. சீரகத்தூள்-1/4டீஸ்பூன்
  7. உப்பு-தேவைக்கேற்ப
  8. மிளகு தூள்-1/4டீஸ்பூன்
  9. எலுமிச்சை சாறு
  10. மசாலா செய்வதற்கு::
  11. தக்காளி -1
  12. வெங்காயம் -1
  13. பச்சை மிளகாய் -4
  14. இஞ்சி பூண்டு விழுது -1/2டீஸ்பூன்
  15. மிளகாய் தூள்
  16. மல்லித்தூள்-1/2டீஸ்பூன்
  17. மிளகு தூள்-1/4டீஸ்பூன்
  18. சீரகத்தூள் -1/4டீஸ்பூன்
  19. கரம்மசாலா-1/2டீஸ்பூன்
  20. மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்
  21. தயிர்
  22. புதினா
  23. கொத்தமல்லித்தழை
  24. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீன் -ஐ சுத்தம் செய்து தோல் நீக்கி மிளகு தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள்,உப்பு தேவைக்கேற்ப சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து பிசறிவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அவற்றை எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை அரைத்து கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    புதினா, கொத்தமல்லித்தழை சிறிதளவு நறுக்கி சேர்த்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  6. 6

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,மிளகு தூள், சேர்த்து கிளறி விடவும்.

  7. 7

    நன்றாக வதங்கியதும் தயிர் சேர்த்து வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வதக்கவும்.

  8. 8

    நன்றாக பச்சை வாசனை போனதும் பொரித்து வைத்துள்ள மீனை சேர்த்து கிளறி விடவும்.

  9. 9

    அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வைக்கவும்.

  10. 10

    நன்றாக கிளறிவிட்டு இறக்கவும். சுவையான மீன் ரோஸ்ட் மசாலா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes