சிக்கன் மோமோஸ் மற்றும் மோமோஸ் சட்னி

Afra bena
Afra bena @cook_20327268
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மைதா -300கிராம்
  2. சிக்கன் -100கிராம்
  3. முட்டைக்கோஸ்-50கிராம்
  4. கேரட் -25கிராம்
  5. பூண்டு -3பல்
  6. இஞ்சி -1துண்டு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. மிளகாய் தூள் -1/2ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. ஸ்பைசி டிப்::
  11. வரமிளகாய் -2
  12. தக்காளி -1
  13. பூண்டு -3பல்
  14. மிளகாய் தூள் -1/4டீஸ்பூன்(தேவைப்பட்டால்)
  15. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா மாவை சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    சிக்கன் -ஐ சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கேரட், முட்டைக்கோஸ் --ஐ பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களையும்,இஞ்சி, பூண்டு,அரைத்த சிக்கன்-ஐ சேர்த்து வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பாதியாக வேகவைத்து இறக்கவும்.

  4. 4

    மாவை தேய்த்து வட்டவட்டமாக கட் செய்து கொள்ளவும்.

  5. 5

    வட்டமாக எடுத்த மாவில் வதக்கிய சிக்கன் கலவையை வைத்து பூண்டு வடிவில் பிடித்து கொள்ளவும்.

  6. 6

    அடுப்பில் இட்லி பானை வைத்து பிடித்து வைத்துள்ள மோமோஸ் -ஐ வைத்து வேகவைத்து இறக்கவும்.

  7. 7

    சட்னி செய்வதற்கு :அடுப்பில் கடாய் வைத்து தண்ணீர் சேர்த்து தக்காளி,மிளகாய், பூண்டு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

  8. 8

    தக்காளி தோல் உறித்து கொள்ளவும். பின் அவற்றை மிக்ஸியில் சேர்த்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும். மோமோஸ் சட்னி ரெடி. (மிளகாய் தூள் கலருக்காக சேர்க்கப்படுகிறது.)

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes