தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப் மைதா மாவு
  2. தேவையானஅளவு உப்பு
  3. 1ஸ்பூன் நெய்
  4. 100கிராம் சிக்கன்
  5. 1 சிறிய வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/2ஸ்பூன் மல்லி தூள்
  10. 1/2ஸ்பூன் கரமசாலா
  11. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  12. சிறிதளவுகறிவேப்பிலை
  13. 1ஸ்பூன் சீரகம்
  14. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் மைதா மாவு, உப்பு, நெய் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    எலும்பு இல்லாத சிக்கனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். வாணலியில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு, மல்லி தூள், கரமசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு சிக்கனை சேர்த்து கிளறி விடவும்.

  4. 4

    பிறகு மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். சப்பாத்தி கட்டையில் ஒரு உருண்டை எடுத்து வைத்து தேய்த்து அதன் ஓரங்களில் சிக்கன் வறுவல் வைத்து கொள்ளவும்.

  5. 5

    அதன் ஓரங்களை மடித்து கொள்ளவும். பிறகு படத்தில் காட்டியபடி கத்தியால் கீறி கொள்ளவும்.இதனை உருட்டி கொள்ளவும்.

  6. 6

    ஒரு பவுலில் 2ஸ்பூன் மைதா மாவு, தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.இதன் இரண்டு ஓரங்களையும் மைதா மாவு பேஸ்ட் வைத்து ஒட்டி கொள்ளவும்.

  7. 7

    அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த தயார் செய்த ரிங் ஐ போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூப்பரான சிக்கன் ரிங் சமோசா தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes