எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 முட்டைக்கோஸ்
  2. 1/2 கப் சிக்கன்
  3. 1 தக்காளி
  4. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 2டீஸ்பூன் சிக்கன் தூள்
  7. 2டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  8. 1டீஸ்பூன் மிளகு தூள்
  9. 1 முட்டை
  10. 1 வெங்காயம்
  11. 1 கேரட்
  12. 1டீஸ்பூன் உப்பு
  13. 2டீஸ்பூன் மல்லி இலை
  14. 3 பூண்டு

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முட்டைக்கோஸ் (மேல் பாகத்தை நீக்கி)மற்றும் தக்காளி சேர்த்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும்

  2. 2

    மிக்ஸியில் சிக்கன் துண்டுகளை சேர்த்து அரைத்து கொள்ளவும்.பாத்திரத்தில் அரைத்த சிக்கன் விழுது,நறுக்கிய வெங்காயம்,கேரட், பூண்டு மற்றும் அரைத்த தக்காளி சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் அதில் மிளகு தூள்,சிக்கன் பொடி,உப்பு,மல்லி இலை,மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    இப்போது முட்டை கோஸ் நன்றாக வெந்ததும் அதில் உள்ள இலைகளை கவனமாக பிரித்து எடுத்து கொள்ளவும்.

  5. 5

    பின்னர் முட்டைகோஸ் இலைகளில் கலந்து வைத்துள்ள சிக்கன் முட்டை விழுதினை சிறிது சிறிதாக வைக்க வேண்டும்.இதனை அப்படியே மடக்கி சுருட்டி கொள்ளவும்.

  6. 6

    இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 30 -40 நிமிடம் சிறிய தீயில் வேக விடவும்.வெந்ததும் அடுப்பை அணைத்து 5 நிமிடம் பின் எடுக்கவும்.

  7. 7

    சுவையான ஆரோக்கியமான எக் சிக்கன் கேபேஜ் ரோல் தயார். தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes