எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கொண்டைக்கடலை -1 1/2கப்
  2. வெங்காயம்
  3. பாதாம் பருப்பு-8
  4. தேங்காய் துருவல் -2ஸ்பூன்
  5. பச்சை மிளகாய்-3
  6. தக்காளி -1
  7. எண்ணெய்
  8. இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்
  10. மிளகாய் தூள் -1 1/2டீஸ்பூன்
  11. மல்லித்தூள் -1 1/2ஸ்பூன்
  12. சீரகத்தூள்-1டீஸ்பூன்
  13. மிளகு தூள் -1/2டீஸ்பூன்
  14. கரம்மசாலா-1/2டீஸ்பூன்
  15. எலுமிச்சை -1
  16. கறிவேப்பிலை
  17. கொத்தமல்லிதழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பாதாம் பருப்பு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இவற்றை அரைத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    தக்காளி அரைத்து கொள்ளவும்.கொண்டைக்கடலை வேகவைத்துக் கொள்ளவும். அவற்றில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  4. 4

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள்,சீரகத்தூள், மிளகு தூள்,கரம் மசாலா, சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கவும்.

  5. 5

    பின் அரைத்த பாதாம் கலவை விழுதை சேர்த்து வதக்கவும். நன்றாக கிளறி விட்டு தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பின் அரைத்த கொண்டைக்கடலை பேஸ்டை சேரத்து பிரட்டி விடவும்.பின் வேகவைத்தக் கொண்டைக்கடலை சேர்த்து கிளறி விட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    பின் எலுமிச்சை சாறு கொத்தமல்லிதழை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes