எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5பேர்
  1. 1- முழு சுரைக்காய்
  2. 10- சின்ன வெங்காயம்
  3. 6 -பல் பூண்டு
  4. 3 -தக்காளி
  5. 2- பச்சை மிளகாய்
  6. 4-வரமிளகாய்
  7. எலுமிச்சை அளவு- புளி
  8. 1டீஸ்பூன்- சீரகம்
  9. 1டீஸ்பூன்- கடுகு
  10. 1/2டீஸ்பூன் -மஞ்சள் தூள்
  11. 1 கொத்து- கறிவேப்பிலை
  12. சிறிது- கொத்தமல்லி இலை
  13. தேவையானஅளவு- எண்ணெய்
  14. தேவையானஅளவு- உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சுரைக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு,பச்சைமிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கி பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் நறுக்கிய சுரைக்காயை சேர்த்து சிறிது மஞ்சள்தூள், சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும். சுரைக் காய் வெந்தவுடன் அதில் ஊற வைத்த புளி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.

  2. 2

    அதன்பின் மத்து வைத்து நன்றாக மைய கடைந்து கொள்ளவும். அல்லது ஆற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின் கடுகு கறிவேப்பிலை தாளித்து கடைசலில் சேர்க்கவும். சுரைக்காய் கடைசல் தயார். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vidhyashree Manoharan
Vidhyashree Manoharan @cook_22267268
அன்று

Similar Recipes