சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்
#hotel
#breakfast
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கிலோ மட்டன்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1ஸ்பூன் மல்லித்தூள்
  7. 1.5ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1/2மூடி தேங்காய்
  9. 4முந்திரி
  10. 1/2ஸ்பூன் கசகசா
  11. 1/2ஸ்பூன் சீரகம்
  12. 1/2ஸ்பூன் சோம்பு
  13. 15புதினா இலை
  14. 1கொத்து கறிவேப்பிலை
  15. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    மட்டனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கழுவவும்.
    பிறகு அதில் உள்ள தண்ணீரை வடித்து மட்டனில் மஞ்சள் தூள், 1ஸ்பூன் மிளகாய் தூள், 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிசறி 30நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    பின்னர் 30நிமிடம் கழித்து குக்கரில் பிசறிய மட்டனை சேர்த்து மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8விசில்(வேகும் வரை) வந்ததும் இறக்கவும்

  3. 3

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், 1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வெந்த மட்டனை தண்ணீருடன் ஊற்றி கொதிக்க விடவும்

  4. 4

    அது கொதிப்பதற்குள் மிக்ஸியில் தேங்காய், கசகசா, முந்திரி, சோம்பு, தக்காளி சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

  5. 5

    மட்டன் கொதித்ததும் அதில் அரைத்த விழது, புதினா (தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்) சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா உடன் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes