எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3 வேகவைத்த முட்டை(தோலுடன்)
  2. 1/2 கப் துருவிய பீட்ரூட்
  3. 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  4. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1ஸ்பூன் உப்பு
  6. 2கப் தண்ணீர்
  7. 2 டேபிள் ஸ்பூன் வினிகர்
  8. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  9. 1/2ஸ்பூன் வெண்ணை
  10. 1/2ஸ்பூன் பூண்டு விழுது
  11. 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
  12. 1 அங்குல பட்டை
  13. 1 அன்னாசி பூ
  14. 1பிரியாணி இலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பீட்ரூட், தண்ணீர், பட்டை, பிரியாணி இலை, அன்னாசி பூ, வினிகர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  2. 2

    5நிமிடம் கொதித்த பின் அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். இப்பொழுது முட்டையை தோல் விரல் விடும் அளவிற்கு கையால் உருட்டிக் கொள்ளுங்கள்.

  3. 3

    பின்னர் அந்த முட்டையை பீட்ரூட் கலவையுடன் சேர்த்து குறைந்தது ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். நேரம் கழித்து தோலை உரித்து எடுக்கவும்.

  4. 4

    பின் இரண்டு துண்டுகளாக வெட்டி நடுவில் இருக்கும் மஞ்சள் கருவை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் போடவும். மஞ்சள் கருவுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், வெண்ணெய், பூண்டு விழுது, உப்பு, வெங்காயம், சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.

  5. 5

    இப்பொழுது நீங்கள் சூடாக பரிமாறலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes