டூட்டி ப்ரூட்டி  கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் மைதா மாவு
  2. 1/4கப் டூட்டி ப்ரூட்டி
  3. 2டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
  4. 1/2கப் சர்க்கரை பவுடர்
  5. 1/3கப் வெண்ணெய்
  6. 1/2ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  7. 1/2ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 2டேபிள்ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் சர்க்கரை மிக்ஸியில் பவுடராக அரைத்து சேர்த்து இதனுடன் வெண்ணெய் சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக அடித்து கொள்ளவும்.வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.

  2. 2

    மற்றொரு பவுலில் மைதா மாவு,கஸ்டர்ட் பவுடர், டூட்டி ப்ரூட்டி, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து விடவும். அடித்த சர்க்கரை கலவையை இதில் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பால் ஊற்றி நன்கு கைகளால் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பிறகு அதனை உருளை வடிவில் உருட்டி சில்வர் பாயிலில் நன்கு கவர் செய்து கொள்ளவும்.

  4. 4

    இதனை ப்ரீஜரில் 15‌ நிமிடம் வைத்து எடுத்த பின்னர் இதனை ஓரங்களில் இருந்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் இந்த துண்டுகளை சிறிதளவு இடைவெளி விட்டு வைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் ப்ரீஹுட் செய்யவும்.

  5. 5

    பிறகு கடாயில் இந்த தட்டை வைத்து மூடி போட்டு 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.அடுப்பை குறைந்த தீயில் வைத்து பேக் செய்யவும்.சூப்பரான டூட்டி ப்ரூட்டி பிஸ்கட் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes