எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 கப்முருங்கைக் கீரை -
  2. 100 கிராம்சின்ன வெங்காயம் -
  3. 1/2 ஸ்பூன்ஜீரகம் -
  4. 1/2 ஸ்பூன்கடலைப்பருப்பு -
  5. 1/4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு -
  6. 1 ஸ்பூன்எண்ணெய் -
  7. 3வரமிளகாய் -
  8. 3 ஸ்பூன்தேங்காய் துருவல் -
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முருங்கைக்கீரையை காம்பை எடுத்து விட்டு கழுவி சுத்தம் பண்ணி தண்ணீர் வடிய விட்டு எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு,சீரகம் போட்டு தாளிக்கவும்.

  3. 3

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு உருவி வைத்த முருங்கைக் கீரையை அதில் போட்டு ஒரு கிளறு கிளறவும்.

  4. 4

    பிறகு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.

  5. 5

    தண்ணீர் சுண்டி முருங்கைக்கீரை வெந்தவுடன் தேங்காய் துருவலை அதில் போட்டு ஒரு நிமிடம் கிளறி பிறகு எடுத்து பரிமாறவும். சுவையான முருங்கைக் கீரை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes