சம்பா நண்டு கிரேவி

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#everyday2
சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 11/2 கிலோ சம்பா நண்டு
  2. அரை மூடி தேங்காய் துருவல்
  3. 20 சின்ன வெங்காயம்
  4. ஒரு பெரிய வெங்காயம்
  5. ஒரு பெரிய தக்காளி
  6. 2 பச்சை மிளகாய்
  7. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. ரெண்டு ஸ்பூன் சோம்பு
  10. ஒரு ஸ்பூன் சீரகம்
  11. ஒரு ஸ்பூன் மிளகு
  12. ஒரு ஸ்பூன் வெந்தயம்
  13. இரண்டு முழு பூண்டு
  14. ஒரு கொத்து கறிவேப்பிலை
  15. கொஞ்சம்கொத்தமல்லி இலை
  16. தேவையானஉப்பு
  17. தேவையான் அளவு தண்ணீர்
  18. 2 குழிக்கரண்டி சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சம்பா நண்டு சுத்தம் செய்வது மிகவும் கடினம் உயிருடன்தான் இருக்கும் அதன் கால்களை முதலில் வெட்டி பிறகு ஓட்டை எடுத்துக்கொண்டு இரண்டாகப் பிளக்க வேண்டும் அப்போது உயிர் துடிக்கும் 10 நிமிடம் கழித்து நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்

  2. 2

    தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு பூண்டு சோம்பு சீரகம் மிளகு கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும்

  3. 3

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும் பிறகு தக்காளி போட்டு வதக்க வேண்டும்

  4. 4

    சுத்தம் செய்த நண்டு துண்டுகளை சேர்த்து தேவையான உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்

  5. 5

    அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து மிதக்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்
    அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வைத்து வேண்டும்

  6. 6

    நண்டில் உப்பு காரம் சார்ந்த குழம்பு கெட்டியாகும் சூப்பரான சம்பா நண்டு கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes