"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Combo2
#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வெஜ் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
  2. பல்லாரி வெங்காயம்-2
  3. தக்காளி-1/4கிலோ
  4. பீன்ஸ்-1/4கிலோ
  5. கேரட்-1/4கிலோ
  6. உருளைக்கிழங்கு-1/4கிலோ
  7. பச்சை பட்டாணி-100கிராம்
  8. நல்லெண்ணெய்-தேவையான அளவு
  9. இஞ்சி பூண்டு விழுது-2டீஸ்பூன்
  10. உப்பு தூள்-தேவையான அளவு
  11. மஞ்சள் தூள்-1/2டீஸ்பூன்
  12. சீரகம் தூள்-1/2டீஸ்பூன்
  13. மிளகாய் தூள்-1டீஸ்பூன்
  14. கொத்தமல்லி தூள்-1டீஸ்பூன்
  15. தண்ணீர்-தேவையான அளவு
  16. தேங்காய்-1மூடி
  17. பொட்டுக்கடலை-2டீஸ்பூன்
  18. கசகசா-1டீஸ்பூன்
  19. முந்திரி பருப்பு-7
  20. கொத்தமல்லித்தள இலைகள்-தேவையான அளவு
  21. தாளிப்புக்கு தேவையான பொருட்கள்:
  22. பிரியாணி இலை-2
  23. பட்டை-2துண்டு
  24. கிராம்பு-4
  25. ஏலக்காய்-4

சமையல் குறிப்புகள்

  1. 1

    2வெங்காயம்,1/4 கிலோ தக்காளியை பொடியாக நறுக்கவும்.1/4கிலோ கேரட்,1/4கிலோ பீன்ஸ்,1/4கிலோ உருளைக்கிழங்கு அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.100கிராம் பச்சை பட்டாணி மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளுங்கள்...

  2. 2

    1மூடி தேங்காயை நறுக்கி அதனுடன் 2டீஸ்பூன் பொட்டுக்கடலை,1டீஸ்பூன் கசகசா,7முந்திரி பருப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் அனைத்தையும் போட்டு அரைக்கவும்...

  3. 3

    அரைத்த தேங்காய் விழுதை ஒரு பவுளில் ஊற்றி வைக்கவும்,தேவையான அளவு கொத்தமல்லித்தள.

    பிரஷ்ஷர் குக்கரில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்த பிறகு 2பிரியாணி இலை,2துண்டு பட்டை,4கிராம்பு,4ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

    பொடியாக நறுக்கிய 2வெங்காயத்தை போட்டு லேசான பொன் நிறமாகும் வரை வதக்கவும்.

  4. 4

    பொடியாக நறுக்கிய 1/4கிலோ தக்காளியை போட்டு நன்றாக
    வதக்கவும்.

    தேவையான அளவு உப்பு தூள்,2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.

    1/4கிலோ பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அடுத்து 1/4கிலோ உருளைக்கிழங்கு,100கிராம் பச்சை பட்டாணி,1/4கிலோ பொடியாக நறுக்கிய பீண்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    1/2டீஸ்பூன் மஞ்சள் தூள் &1/2டீஸ்பூன் சீரகம் தூள்,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1டீஸ்பூன் கொத்தமல்லித்தூள் சேர்த்து காய்கறிகளில் மசாலா படும்படி நன்றாக வதக்கவும்.
    தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  7. 7

    பிரஷ்ஷர் குக்கரில் டயர்,வெயிட் போட்டு மூடி 2 அஅல்லது 3விசில் விடவும்...

    காய்கறி வெந்த பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுது,தேவையான அளவு கொத்தமல்லித்தள சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.....

  8. 8

    "வெஜ் குருமா" ரெடி.தேவையான அளவு ஒரு பவுளில் வைத்து கொத்தமல்லித்தள இலைகள் தூவி பரிமாறவும்....

    "சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா"தயார்........

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes