எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
7 பரிமாறுவது
  1. 7முட்டை
  2. 4பெரிய வெங்காயம்
  3. 4தக்காளி
  4. 2டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  5. 3பச்சை மிளகாய்
  6. தலா 1 துண்டு பட்டை, பூ, இலை
  7. 1\4ஸ்பூன் சோம்பு
  8. 1\2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1கொத்து கறிவேப்பிலை
  10. 3டேபிள்ஸ்பூன் முழு மிளகு
  11. 1கைப்பிடி மல்லித் தழை
  12. தேவையானஅளவு உப்பு
  13. 3டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகலமான கடாயில் தண்ணீர் ஊற்றி முட்டைகளைப் போட்டு, வேகவைத்து, ஆற வைத்து, தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பூ, சோம்பு, இலை தாளிக்கவும்

  3. 3

    பிறகு நீளவாக்கில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பிறகு, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து அடுப்பை குறைவான தணலில் வைத்து வதக்கவும்

  4. 4

    இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து அரை நிமிடம் வரை வதக்கிய பிறகு அரை கப் அளவு தண்ணீர் ஊற்றவும்

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து, பத்து நிமிடம் வரை தட்டு கொண்டு மூடி, நன்கு வேக வைத்து எடுத்த பிறகு மசாலா நன்கு பச்சை வாடை போக இருக்கும். இப்போது முட்டைகளை அதன் மேல் வைக்கவும்

  6. 6

    மிக்ஸி ஜாரில் முழு மிளகை சேர்த்து நன்கு பொடித்து, உடனடியாக முட்டையின் மீது தூவவும்

  7. 7

    மெதுவாக கிளறி, குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்திருந்து எண்ணெய் பிரியும் வரை வைக்கவும்

  8. 8

    இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes