தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. கேக் செய்வதற்கு
  2. 1 கப் - மைதா மாவு
  3. 1/2 கப் - பொடித்த சர்க்கரை
  4. 1/2 கப் - காய்ச்சி ஆற வைத்த பால்
  5. 1/4 கப் - வாசனை இல்லாத எண்ணெய்
  6. 1தே.க - பேக்கிங் பவுடர்
  7. 1/2தே.க - பேக்கிங் சோடா
  8. 1தே.க - வெள்ளை வினிகர்
  9. 1தே.க - சர்க்கரை
  10. 1 தே.க - இன்ஸ்டன்ட் காபி பவுடர் (ப்ரு சிறந்தது)
  11. 1 தே.க - வெது வெதுப்பான தண்ணீர்
  12. டல்கோணா க்ரீம் செய்வதற்கு
  13. 1/4 கப் - சர்க்கரை
  14. 1 மேஜைக்கரண்டி - இன்ஸ்டன்ட் காபி பவுடர்
  15. 1 மேஜைக்கரண்டி - வெதுவெதுப்பான தண்ணீர்
  16. அலங்கரிக்க
  17. 5- உலர்ந்த செர்ரி

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் சர்க்கரை, காப்பி பவுடர், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கரண்டி வைத்து கைகளால் 10 நிமிடம் அடிக்கவும். சர்க்கரை கரைந்து கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு.

  2. 2

    பிறகு அதில் எண்ணெய், பொடித்த சர்க்கரை மற்றும் வினிகர் சேர்த்து ஒன்று சேர கலக்கவும்.

  3. 3

    அந்தக் கலவையில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தயாராக வைத்துள்ள கேக் பாத்திரத்தில் ஊற்றவும்.

  4. 4

    கேக் பாத்திரத்தை இரண்டு முறை தட்டி அதில் உள்ள காற்று குமிழ்கள் வெளியேற செய்து விட்டு 10 நிமிடம் முன்கூட்டியே சூடுபடுத்தி தயாராக வைத்துள்ள ஓவனில் 160 டிகிரி வெப்பநிலையில் 25 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

  5. 5

    கேக் தயாராகி விட்டதா என்பதை பார்ப்பதற்கு கேகின் நடுப்பகுதியில் குச்சி அல்லது கத்தி வைத்து பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும். கேக்கை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக ஆற வைக்க வேண்டும்.

  6. 6

    க்ரீம் செய்வதற்கு காபி பவுடர், சர்க்கரை, வெதுவெதுப்பான தண்ணீர் சேர்க்கவும்.

  7. 7

    பீட்டர் அல்லது கரண்டி வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்... சர்க்கரையின் அளவு கூடுதலாக இருப்பதனால் கசப்புத்தன்மை தெரியாது.

  8. 8

    பிறகு கேக்கை இரண்டாக வெட்டி தயார் செய்த கிரீமை தடவி விருப்பத்திற்கேற்ப அலங்கரித்து பரிமாறவும்.

  9. 9

    சுவையான டல்கோணா சுவைக்க தயார் கமகமக்கும் காபி மணத்துடன்.

  10. 10
  11. 11
  12. 12
  13. 13
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes