எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. 4முட்டை
  2. 2பெரிய வெங்காயம்
  3. 3தக்காளி
  4. மூணு ஸ்பூன்முட்டை மசாலா
  5. அரை கப்தேங்காய்
  6. 4வர மிளகாய்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் முட்டையை நன்கு வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வரமிளகாயை வறுத்து எடுத்துக்கொண்டு பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சோம்பு சீரகம் ஆகியவற்றை வதக்கி எடுத்துக் கொள்ளவும் இதனுடன் தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    வணக்கி வைத்த அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி கட் பண்ணி வைத்த முட்டையை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவக்க வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நன்கு வதக்கி அரைத்த விழுதை அதில் சேர்த்து முட்டை மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  6. 6

    பிறகு ட்ரை பண்ணி வைத்த முட்டையை நன்கு கிரேவி பதம் வந்ததும் அதில் சேர்த்து ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Surendhar
அன்று

Similar Recipes