சாகோ சிப் குக்கீஸ்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#bakingday
சுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1/2 கப் பட்டர்
  3. 1/2 பவுடர் சர்க்கரை
  4. 1/2 நாட்டு சர்க்கரை
  5. 1 மேஜை கரண்டி வெனிலா எசன்ஸ்
  6. 1/2 மேஜை கரண்டி குக்கிங் சோடா
  7. 1/2 மேஜை கரண்டி பேக்கிங் பவுடர்
  8. 1 மேஜை கரண்டி பால்
  9. வெனிலா எசன்ஸ் போட்ட சோக்குல எவ்வளவு
  10. 1 மேஜை கரண்டி சாகோ சிப்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பவுலில் பட்டர் பவுடர் சுகர் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை வரை அடித்துக் கொள்ளவும்

  2. 2

    பின் அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக மைதா மாவு கலந்து நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும், பின் அதனுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,வெண்ணிலா எசன்ஸ் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும், பின் அதனுடன் சாகோ சிப்பை சேர்த்து நன்கு கிளற வேண்டும்

  3. 3

    அதனை மூடி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும், அரை மணி நேரம் கழித்து ஒரு தட்டில் பட்டர் அல்லது நெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    இன்னொரு குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து குக்கரை 10 நிமிடம் பிரி ஹீட் செய்து கொள்ள வேண்டும். சிறிதளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து லேசாக அமத்தி எடுக்கவும்,

  5. 5

    எல்லாவற்றையும் கிரீஸ் செய்த தட்டில் வைத்து சாகோ சிப்பை மேலாக வைத்து அலங்கரிக்கவும், அதனை ஒரு பிரி ஹீட் குக்கரில் வைத்து. விசில் மற்றும் கேஸ் கட்டர் போடாமல் மூடி பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வைக்கவும்

  6. 6

    20 மணி நேரம் கழித்து திறந்து எடுத்து நன்கு ஆற வைத்து பரிமாற வேண்டும்

  7. 7

    சுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ரொம்ப சுலபமாக செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes