எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  1. 1சிறிய கப் அளவில் மீதியான சாதம்
  2. 2ஸ்பூன் அரிசி மாவு
  3. 1பெரிய வெங்காயம்,1மிளகாய்
  4. சிறுதுண்டு இஞ்சி,
  5. 1/2ஸ்பூன் மிளகு
  6. தேவையான அளவுகறிவேப்பிலை ,உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில், மதியம் மீதியான ஒரு கப் சாதத்துடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும். தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்.

  2. 2

    அரைத்த கலவையில், நறுக்கிய வெங்காயம், மிளகாய்,இஞ்சி,மிளகுதேவையான உப்பு மற்றும் அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.(நான் வெங்காயம்,மிளகாய் சேர்க்கவில்லை)

  3. 3

    மாவு இன்னும் தண்ணீர் பதத்தில் இருந்தால் மேலும் சிறிதளவு அரிசி மாவு சேர்க்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் சூடானதும், கையில் தண்ணீர் தொட்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து தட்டையாக வடை வடிவத்திற்கு மாற்றி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

    அவ்வளவுதான் சுவையான வடை ரெடி.

  5. 5

    குறிப்பு:
    1.வடை தட்டி எண்ணெயில் போட்டதும் கரண்டியால் கிண்ட கூடாது.

    2.எண்ணெயில் போட்டு கிண்டாமல் இருந்தும் மாவு பிரிந்தால்,இன்னும் கொஞ்சம் அரிசி மாவு சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes