எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. 50 கிராம் மீன் மேக்கர்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 22 தக்காளி
  4. ஏழு முதல் எட்டு முந்திரி
  5. சிறியதுண்டு இஞ்சி
  6. எட்டுப் பூண்டுப்பல்
  7. 2பிரிஞ்சி இலை
  8. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. அரை ஸ்பூன் கரம் மசாலா
  10. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. ஒரு ஸ்பூன் தனியா தூள்
  12. அரை ஸ்பூன் சீரகத்தூள்
  13. தேவையான அளவு எண்ணெய் மற்றும் உப்பு
  14. 1 பச்சை மிளகாய்
  15. சிறிதளவுகாய்ந்த வெந்தய இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மீல்மேக்கரை சேர்த்து அதில் சுடு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும் கொதித்தவுடன் அதை நீரிலிருந்து பிழிந்து இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் பூண்டு இஞ்சி தக்காளி முந்திரி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை சேர்க்கவும் பின் வதக்கிய அரைத்த மசாலாவை சேர்த்து அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு கரம் மசாலா சீரகத்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் அதில் நீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்த உடன் அதில் நறுக்கி வைத்துள்ள மீல்மேக்கரை சேர்க்கவும் கிரேவி பதம் வந்தவுடன் காய்ந்த வெந்தய இலைகளை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes