எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. மைதா கால் கிலோ, மீள் மேக்கர் நூறுகிராம், வெங்காயம் ஒன்று
  2. பச்சை மிளகாய் 2, மிளகு தூள் 1 ஸ்பூன்
  3. வெங்காய தாள் சிறிதளவு
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. கேரட் 1

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.

  2. 2

    பின் நன்றாக தண்ணீரைப் பிழிந்து தனியே தனியே எடுத்து வைக்கவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் வேகவைத்த மீல்மேக்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

  4. 4

    பொடித்த மீல்மேக்கர் உடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் வெங்காயத்தாள் மிளகுத்தூள், துருவிய கேரட்சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    மைதா உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.

  6. 6

    சிரு மாவை திரட்டி அதன் நடுவில் மீல் மேக்கர் கலவையை வைத்து, அழகாக மடிக்கவும். அனைத்தையும் தயார் செய்க

  7. 7

    இட்லி பாத்திரத்தை சூடு செய்யவும்.

  8. 8

    தயார் செய்த மோமோஸ் துண்டுகளை 20 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

  9. 9

    மீள் மேக்கர் மோமோஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dharshini kamu
Dharshini kamu @cook_29601801
அன்று

Similar Recipes

More Recommended Recipes