எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் காளான்
  2. 1கப் முட்டைக்கோஸ்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 3தக்காளி
  5. 1+1tblspமிளகாய்த்தூள்
  6. 1/2+1/2 Spoonமஞ்சள் தூள்
  7. 1+1tblspnகரம் மசாலாத்தூள்
  8. 1spoonமல்லித்தூள்
  9. 1கபஂ மைதா மாவு
  10. 1/2கபஂ கார்ன் ஃப்ளார் மாவு+1Tblspn
  11. 1கைப்பிடி கொத்தமல்லி தழை
  12. தேவையானஅளவு எண்ணெய்
  13. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காளானை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அதனுடன் முட்டைகோஸ் பொடியாக நறுக்கி நன்கு கழுவி பிழிந்து சேர்க்கவும். இதனுடன் 1tbslpn மிளகாய்த்தூள், 1/2spn மஞ்சள்தூள் சேர்க்கவும்

  3. 3

    தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மைதா மாவு, கார்ன் ஃப்ளார் மாவு சேர்க்கவும்

  4. 4

    இவை அனைத்தையும் நன்கு ஒருசேர பிசைந்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் இதனை பக்கோடாக்களாக சிறிது சிறிதாக போடவும்

  5. 5

    இதை இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுக்கவும்

  6. 6

    தக்காளியை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வதக்கி விடவும்

  7. 7

    பிறகு தக்காளி விழுதையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து குறைந்த தணலில் வதக்கவும். நன்கு வதங்கி வந்ததும் 1tblspn மிளகாய்த்தூள், 1tblspn கரம் 1/2spn மசாலாத்தூள், மஞ்சள்தூள், 1tblspn மல்லித்தூள் சேர்க்கவும்

  8. 8

    உப்பு சேர்த்து, பச்சை வாடை போக நன்கு வதங்கியதும், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்

  9. 9

    இதனை நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் பக்கோடா களை சிறிது சிறிதாக பிரித்து போடவும்

  10. 10

    மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்திருந்து கிளறி விட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes