எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
3 servings
  1. 1/2கிலோ மரவள்ளிக்கிழங்கு
  2. தேவையான அளவுஉப்பு
  3. 1ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  4. 1/2ஸ்பூன் கடுகு
  5. 1/2ஸ்பூன் உளுந்து
  6. 2காய்ந்த மிளகாய்
  7. 1கொத்து கருவேப்பிலை
  8. 3டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    மரவள்ளிக்கிழங்கின் மேல் தோலை நீக்கி விட்டு இரண்டாக வெட்டவும். பின்னர் அதன் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி விட்டு சிறு தூண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும். பின்னர் குக்கரில் நறுக்கிய கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 4விசில் விடவும்.

  2. 2

    வெந்த கிழங்கை தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெந்த கிழங்கை சேர்த்து கிளறவும்.

  3. 3

    அதன் மேல் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மரவள்ளிக் கிழங்கு மசியல் தயார். கிழங்கை மத்தை வைத்து மசித்தும் தாளிக்கலாம். அருமையான சுவையில் மசியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes