எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25minits
3 பரிமாறுவது
  1. 1/4கருணை கிழங்கு
  2. 15 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. சிறிதளவுபுளி
  5. 3 பச்சை மிளகாய்
  6. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  9. 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்து
  10. 1கொத்து கறிவேப்பிலை
  11. தேவையான அளவு எண்ணெய்
  12. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

25minits
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    முதலில் கருணைக் கிழங்கை மண்ணில்லாமல் கழுவி குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும் பிறகு வேக வைத்த கருணைக்கிழங்கை மசித்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    மசித்த கருணைக்கிழங்கில் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சிறிதளவு புளி கரைசல் சேர்த்து

  4. 4

    நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு அரை டீஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும்

  5. 5

    பிறகு பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  6. 6

    தக்காளி வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு கலந்து வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்

  7. 7

    பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்

  8. 8

    சுவையான கருணைக்கிழங்கு மசியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes