எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 பாக்கெட் நெத்திலி கருவாடு
  2. 1 கப் சின்ன வெங்காயம்
  3. 4 தக்காளி
  4. 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 3 ஸ்பூன் குழம்புமிளகாய்த்தூள்
  6. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  7. 1/2 கப் புளிக்கரைசல்
  8. தேவையானஅளவுகல் உப்பு
  9. சிறிதுமஞ்சள் தூள்
  10. தேவையானஅளவுநல்லெண்ணெய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1/2 ஸ்பூன் சீரகம்
  13. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  14. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  15. 1 ஸ்பூன் வெல்லம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    கருவாட்டை சுடுதண்ணீரில் ஐந்து நிமிடம் வரை ஊறவைத்து சுத்தம் செய்து அலசி இரண்டு மூன்று முறை நன்றாக மண் போக அலசவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் கருவாட்டை சேர்க்கவும்

  2. 2

    பின் உப்பு மஞ்சள் தூள் குழம்பு மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும் பின் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து நன்கு திக்காகும் வரை கொதிக்க விடவும்

  4. 4

    சுவையான ஆரோக்கியமான கருவாட்டு தொக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes