கேரட் தொக்கு

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#GA4
#week3
இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் கேரட்
  2. 5 தக்காளி
  3. 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  4. 2 டேபிள் ஸ்பூன் பூண்டு விழுது
  5. 1_1/2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  6. 4 வரமிளகாய்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கல் உப்பு தேவையான அளவு
  9. 1/2 கப் நல்லெண்ணெய்
  10. 1 ஸ்பூன் சோம்பு
  11. 1/4 ஸ்பூன் வெந்தயப் பொடி
  12. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  13. 1_1/2 ஸ்பூன் கடுகு
  14. 1 ஸ்பூன் துருவிய வெல்லம்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கேரட் ஐ துருவி தக்காளி ஐ நறுக்கி சோம்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சாம்பார் பொடி, வெந்தய பொடி, பெருங்காயத்தூள்,சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்

  4. 4

    மிதமான தீயில் வைத்து தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்

  5. 5

    எண்ணெய் பிரிந்து வரும் போது துருவிய வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான கேரட் தொக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes