ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 50கி வெண்ணெய்
  2. 3/4 கப் கேழ்வரகு மாவு
  3. 1/4 கப் கோதுமை மாவு
  4. 1 டேபிள்ஸ்பூன் சாக்கோ பவுடர்
  5. 1/4 கப் நாட்டு சர்க்கரை
  6. 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/4 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  8. 1 டேபிள்ஸ்பூன் டெசிகேட்டடு கோக்கனட்
  9. 2 டேபிள்ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெண்ணெயை அறை வெப்ப நிலையில் நன்கு அடித்து எடுத்து கொள்ளவும். பின் இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, சாக்கோ பவுடர் &பேக்கிங் பவுடர் அனைத்தையும் சலித்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    வெண்ணெய் கலவையில் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்.இதோடு டெசிகேட்டடு கோக்கனட் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.அழுத்தி பிசைய தேவையில்லை.தேவையெனில் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும். நான் செவ்வக வடிவில் பிசைந்து சிறிது நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து வெட்டி எடுத்துள்ளேன்

  4. 4

    இட்லி தட்டில் வெண்ணெய் தடவி கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 15 நிமிடம் சூடேற்றும் பின் வெட்டி எடுத்த துண்டுகளை இட்லி தட்டில் வைத்து 20-30 வேக வைத்து எடுக்கவும். ஆரோக்கியமான செய்த ராகி குக்கீஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes