எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 4பிரெட் துண்டுகள்
  2. 3/4கப் மைதா மாவு
  3. 1/2கப் சர்க்கரை
  4. 75கிராம் வெண்ணெய்
  5. 1முட்டை (இதற்கு பதிலாக பால் சேர்த்து கொள்ளலாம்)
  6. 1ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  7. 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/4கப் சாக்கோ சிப்
  9. 10பாதாம் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பிரெட் ஐ சிறிதாக பிய்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து பவுடராக அரைத்து எடுத்த பின் இதில் முட்டை சேர்த்து அடித்து கொள்ளவும். பிறகு வெண்ணெய் சேர்த்து அடித்து கொள்ளவும்.

  3. 3

    அடித்த கலவையை ஒரு பவுலிற்கு மாற்றி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக கைகளால் அடித்து கொள்ளவும். தேவைப்பட்டால் பிரெட் துகள்களை வாணலியில் லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு விஸ்க் வைத்து அடித்த கலவையில் கொஞ்சம் பிரெட் துகள்கள் மற்றும் மைதா மாவில் பேக்கிங் சோடா கலந்து விட்டு சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக அடித்து கொள்ளவும். இவ்வாறு இரண்டையும் சிறிது சிறிதாக கலந்து விஸ்க் வைத்து கலந்து விடவும்.

  5. 5

    பின்னர் சாக்கோ சிப் மற்றும் பாதாம் துண்டுகள் சிறிதாக நறுக்கியது சேர்த்து விரல்களால் லேசாக கிளறி விடவும்.

  6. 6

    பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் கட் செய்து வைத்து கொள்ளவும். ஓவனை 170டிகிரியில் ப்ரீஹூட் செய்து வைத்து கொள்ளவும்.கைகளில் சிறிதளவு மாவை எடுத்து அழுத்தம் கொடுக்காமல் லேசாக உருட்டி கொள்ளவும்.

  7. 7

    இதே போல் செய்து ட்ரேயில் இடைவெளி விட்டு வைத்து கொள்ளவும். இதை ஓவனில் வைத்து 170 டிகிரி கன்வக்ஷன் மோடில் 17 நிமிடம் பேக் செய்து எடுத்து கொள்ளவும்.

  8. 8

    பிறகு வெளியே எடுத்து கூலிங் ரேக்கில் வைக்கவும். சூடு தணிந்த பின்னர் எடுத்து பரிமாறவும்.இந்த குக்கீஸ் மிகவும் சுவையாக இருந்தது. வெளிபுறம் கிரிஸ்பியாக உட்புறம் சாஃப்ட்டாக இருந்தது.

  9. 9

    அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சூப்பரான சுவையில் பிரெட் சாக்கோ சிப் குக்கீஸ் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes