தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 1/2கப் அரிசி
  2. 1/2 கப் மைதா மாவு
  3. 1/4 கப் சக்கரை
  4. 2 முட்டை
  5. 1/2 தேக்கரண்டி உப்பு
  6. 1/2 கப் பால்
  7. 1/2 தேக்கரண்டி சமையல் சோடா(பேக்கிங் சோடா)
  8. 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  9. 3 சொட்டு விருப்பப்பட்ட சாரம் (எஸ்ஸென்ஸ்)
  10. அலங்காரத்திற்கு முந்திரி, பாதாம்,பிஸ்தா, திராட்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரிசியை குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஊற வைத்த அரிசியை நன்கு மாவாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மாவுடன் முட்டை மற்றும் சக்கரை சேர்த்து மீண்டும் நன்கு அரைக்கவும்.

  4. 4

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் மைதா மாவை சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்.

  5. 5

    பிறகு பால் சேர்த்து கேக் மாவு பதத்திற்கு கலக்கவும்.

  6. 6

    பின் சாரம், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.

  7. 7

    சோடா சேர்த்த பின் அதிக நேரம் எடுக்காமல், கேக் செய்யும் பாத்திரத்தில் எண்ணையை தடவி அதில் கேக் கலவையை ஊற்றவும்.

  8. 8

    அதன் மேல் அலங்காரத்திற்கு விருப்பத்திற்கேற்ப பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் திராட்சை சேர்க்கவும்.

  9. 9

    குக்கரில் இட்லி செய்வது போன்று அடியில் தண்ணீர் சேர்த்து, ஒரு தட்டின் மெல் இந்த பாத்திரத்தை வைத்து குக்கரை மூடி விசில் இல்லாமல் மிதமான தீயில் 15 நிமிடங்கள் வைக்கவும்.

  10. 10

    15 நிமிடங்கள் பின் கேக் சரிபார்த்து, தேவையெனில் மேலும் 5 நிமிடங்கள் வைக்கலாம்.

  11. 11

    கேக் பாத்திரத்தை எடுத்து ஓரங்களில் ஒரு கத்தியை கொண்டு மெதுவாக எடுக்கவும்.ஒரு தட்டை கொண்டு கவிழ்த்து கேக்கை எடுக்கவும்.

  12. 12

    சுவையான மிருதுவான அரிசி கேக் தயார்!!

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ashwini Lakshmanakumar
Ashwini Lakshmanakumar @cook_17099608
அன்று

Similar Recipes