எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
5-6 நபர்கள்
  1. மைதா - 2 கப்
  2. கொகோபவுடர் - 3/4 கப்
  3. பேக்கிங் பவுடர் - 2டீஸ்பூன்
  4. பேக்கிங் சோடா- 1டீஸ்பூன்
  5. உப்பு- 1/2 டீஸ்பூன்
  6. சர்கறை- 2கப்
  7. பால்- 1கப்
  8. எண்ணெய்- 1/2 கப்
  9. முட்டை-3
  10. வெண்ணிலா எசன்ஸ்- 2 டீஸ்பூன்
  11. சர்கறை பாகு தயாரிக்க : சர்கறை- 1/2 கப்
  12. தண்ணீர்- 1/2 கப்
  13. ப்ரஷ்க்ரீம் தயாரிக்க:
  14. விப்பிங்க்ரீம்- 2 கப்
  15. சர்கறை- 1/4 கப்
  16. 10 ரூபாய் சாக்கலேட்-4 பாக்கட்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் மைதா மாவு கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு அனைத்தையும் சளித்து சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    அதே பவுலில் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    நன்கு கலந்த பின் பால், எண்ணெய், முட்டை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து பீட்டரால் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    ஒரு குக்கரில் அரை இன்ச் அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் இல்லாமல் 20 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து கொள்ள வேண்டும்.

  5. 5

    ஒரு கேக்பேனில் வெண்ணை தடவி சிறிது மைதா மாவு தூவி கலந்து வைத்துள்ள கேக் மாவு ஊற்றி தட்டிக் கொள்ளவும்.

  6. 6

    பிரீ ஹீட் செய்த குக்கரில் விசில் போடாமல் 40 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  7. 7

    அடுத்தது ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகு காய்ச்ச சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சிரப் தயாரித்துக்கொள்ள வேண்டும். பதம் எதுவும் தேவை இல்லை.

  8. 8

    விப்பிங் க்ரீமை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து பீட்டரில் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

  9. 9

    பிறகு கேக் நன்கு ஆறிய பின் பேனில் இருந்து வெளியே எடுத்து மூன்றாக கட் செய்து கொள்ள வேண்டும்.

  10. 10

    முதல் லேயரை ஒரு ப்ளேட்டில் வைத்து சுகர் சிரப் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதன்மேல் விப்பிங் க்ரீம் தடவிக் கொள்ள வேண்டும்.

  11. 11

    இதேபோல் மீதமுள்ள இரண்டு லேயர்களுக்கும் செய்து கொள்ள வேண்டும். பிறகு கேக் முழுவதும் க்ரீமை அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

  12. 12

    சாக்லேட்டுகளை துருவி கேக் முழுவதும் தூவி கொள்ள வேண்டும்.

  13. 13

    சுவையான ஃப்ரஸ் கிரீம் சாக்லேட் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes