கிராமத்து முருங்கைக்காய் குழம்பு

#friendshipday #குக்கிங்பையர்@26922984
இன்று எத்தனையோ வகைகள் சமையல் செய்வதில் வந்துவிட்டாலும் எப்பொழுதும் என்னுடைய ஓட்டு கிராமத்து பழமையான சமையல் முறைக்குத் தான். ஏனென்றால் கிராமத்து சமையல் தனித்துவமே வேறு கைப்பக்குவம் சுவையை அதிகமாக்கி காட்டும் உப்பு உறைப்பு அதிகமாக இருக்கும். மிக்ஸி கிரைண்டர் போன்றவை இல்லாமல் கையில் அரைத்து செய்வதால் மேலும் சுவை கூடியிருக்கும் .விரைவில் கெட்டுப் போகாது. அப்படி தான் இந்த முருங்கைக்காய் குழம்பு வைத்துள்ளேன். இந்த ரெசிபியை நம் குக் பாட் குக்கிங் பையர் ரெசிபி பார்த்து செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். தேவையான அளவு மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள், வரமிளகாய் தூள் எடுத்துக் கொள்ளவும்.
- 2
மேல் கூறிய அளவில் வேர்கடலை, கசகசா,தேங்காய் துருவல்,வெள்ளை எள்ளு எடுத்துக் கொள்ளவும்.ஒரு வெறும் வாணலியில் முதலில் வேர்க்கடலையை லேசாக வறுத்துக் கொண்டு பிறகு எள்ளு மற்றும் கசகசாவை சேர்த்து சூடு ஏற வறுக்கவும். பிறகு தேங்காய் துருவலை சேர்த்து எல்லாவற்றையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.தீய விட வேண்டாம். தண்ணீர் சேர்த்து கையில் அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். அல்லது மிக்சி ஜாரில் அழைத்து நைசாக எடுத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் வர கொத்தமல்லி தூள் சேர்த்து பச்சை வாசம் போக வறுத்துக் கொள்ளவும். மீண்டும் பொடியாக நறுக்கிய தக்காளியை இவற்றுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடம் வதக்கி விடவும்.
- 4
பின்னர் துண்டுகளாக அரிந்து வைத்த முருங்கைக் காயை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து விடவும். வாணலியை மூடி வைக்கவும். மிதமான தீயில் 15 நிமிடம் வரை காயை நன்கு வேகவிடவும்.அவ்வப்போது திறந்து தண்ணீர் சுண்டி உள்ளதா என்று பார்த்து தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்கு வெந்தவுடன் இறக்கி வைக்கவும். தேவை என்றால் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளலாம்.
- 5
சுவையான கிராமத்து முருங்கைக்காய் குழம்பு தயார். பருப்பு சேர்க்கத் தேவை இல்லை..சூடான சாதத்துடன் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். நன்றி குக்கிங் பையர்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு


முருங்கைக்காய் குருமா


சேனைக்கிழங்கு மசாலா


முருங்கைக்காய் ரசம்


முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry


முருங்கைக்காய் சாம்பார்


காலிஃப்ளவர் தக்காளி ரோஸ்ட்...😊🍅(cauliflower tomato roast recipe in tamil)


மசாலா முருங்கைக்காய் குழம்பு


பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)


முருங்கைக்காய் குழம்பு(murungaikai kulambu recipe in tamil)


கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)


முருங்கைக்காய் குழம்பு(murungaikkai kulambu recipe in tamil)


முருங்கைக்காய் குழம்பு(drumstick curry recipe in tamil)


முருங்கைக்காய் குழம்பு(murungaikkai kulambu recipe in tamil)


முருங்கைக்காய் பொரியல்


ஸ்டப்டு(Stuffed) முருங்கைக்காய்


பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)


முருங்கைக்காய் மட்டன் பால்ஸ் கிரேவி


மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(


#முருங்கைக்காய் பொரியல்


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)


ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு


முருங்கைக்காய் மசாலா


முருங்கைக்காய் மொச்சை குழம்பு


முருங்கைக்காய் கூட்டு


முருங்கைக்காய் பொரியல்(drumstick poriyal recipe in tamil)


முருங்கைக்காய் புளி குழம்பு


முருங்கைக்காய் கறி


நிலக்கடலை குழம்பு / nilakadalai kulambu reciep in tamil


சென்னா மசாலா (Channa masala recipe in tamil)

கமெண்ட்