#தக்காளி சமையல் ஆலு  வித் டொமேடோ தம்

Nazeema Banu
Nazeema Banu @cook_18432584
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோசிறு உ.கிழங்கு
  2. கால் கிலோதக்காளி
  3. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  4. அரை ஸ்பூன்ம.தூள்
  5. ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  6. ஒன்றுபெ.வெங்காயம்
  7. இரண்டுப.மிளகாய்
  8. சிறிதுகறிவேப்பிலை
  9. கால் கப்ரீபைண்டு ஆயில்
  10. மூன்றுபிரியாணி இலை
  11. அரை ஸ்பூன்கரம் மசாலா தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை ம.தூள் சேர்த்து முழுதாக வேக வைத்து தோலுரித்து வைக்கவும்.

  2. 2

    தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சேர்த்து வதக்கி அதில் அரைத்த தக்காளி வெங்காய விழுதை சேர்க்கவும்.

  4. 4

    அதனுடன் மி.தூள்.உப்பு.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  5. 5

    எல்லா மசாலாவும் வதங்கி பச்சை வாசனை போனதும் அரை கப் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்குகளை முழுசாக சேர்க்கவும்.

  6. 6

    கடாயை மூடி மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து கரம் மசாலா தூள் தூவி கிளறி இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_18432584
அன்று

Similar Recipes