தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 பெரிய வெங்காயம்
  2. 1/2 முட்டைகோஸ்
  3. 1/2 கேப்ஸிகம்
  4. ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  5. ஒரு கொத்து கறிவேப்பிலை
  6. 1கப் கடலை மாவு
  7. 1/4 கப் அரிசி மாவு
  8. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. தேவையானஅளவு உப்பு
  11. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  12. 1/2டீஸ்பூன் மிளகு சீரகத்தூள்
  13. பொறித்து எடுப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முட்டைகோஸ், வெங்காயம், கேப்ஸிகத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வைத்த முட்டைகோஸ், வெங்காயம், கேப்ஸிகத்தை சேர்க்கவும்.

  3. 3

    இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகு சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    பின்பு கருவேப்பில்லை, கொத்தமல்லி மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து வைக்கவும்.

  5. 5

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் முட்டைகோஸ் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.

  6. 6

    சுவையான முட்டைகோஸ் கேப்ஸிகம் பகோடா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes