மசாலா முட்டை கறி

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#immunity _ #book
விட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 15முட்டை
  2. 200கிராம் பெரிய வெங்காயம்
  3. 3தக்காளி
  4. 2டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 3பச்சை மிளகாய்
  6. 1/2கப் தேங்காய் துருவல்
  7. 2ஸ்பூன் தனியாத்தூள்
  8. 1/2ஸ்பூன் சீரகத்தூள்
  9. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1_1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. கறிவேப்பிலை சிறிது
  13. கொத்தமல்லி தழை சிறிது
  14. 100மில்லி எண்ணெய்
  15. 1ஸ்பூன் கடுகு
  16. மசாலா அரைக்க:
  17. 1கப் சின்ன வெங்காயம்
  18. 25முந்திரி
  19. 1_ஸ்பூன் சோம்பு
  20. 4டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை வேகவைத்து தோல் உரித்து மேல் பகுதியை மட்டும் கத்தியால் நான்காக கீறி கொள்ளவும்

  2. 2

    பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் தேங்காய் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து பால் எடுக்கவும்

  3. 3

    மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம், முந்திரி, சோம்பு சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும், தக்காளி ஐ தனியாக அரைத்து வைக்கவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்

  5. 5

    பின் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் தனியாத்தூள்,மிளகாய்த்தூள்,கரம் மசாலா தூள், சீரகத்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  7. 7

    பின் அரைத்த விழுது மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்

  8. 8

    பின் நான்காக கீறிய முட்டையை சேர்த்து மெதுவாக கிளறி மூடி வைத்து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்

  9. 9

    பின் மூடியை திறந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மெதுவாக கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  10. 10

    சுவையான மசாலா முட்டை கறி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes