மின்ட் மசாலா மில்க்(M M M)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#immunity #goldenapron3 #book
புதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
ஒரு நபருக்கு/ ஒரு டீஸ்பூன் பவுடர்
  1. அரைக்கப் வரக்கொத்தமல்லி
  2. கால் கப் சீரகம்
  3. 2டீஸ்பூன் மிளகு
  4. ஒரு டீஸ்பூன் சோம்பு
  5. 6 ஏலக்காய்
  6. 10 கிராம்பு
  7. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. ஒரு டீஸ்பூன் சுக்கு பவுடர்
  9. பரிமாற
  10. மூன்று ஸ்பூன் அரைத்த பவுடருக்கு:
  11. இரண்டரை கப் தண்ணீர்
  12. அரை கப் பால்
  13. ஒரு ஸ்பூன் தேன்
  14. 2டீஸ்பூன் வெல்லம்
  15. 20 பொதினா தலைகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் அரை கப் வரக்கொத்தமல்லி, கால் கப் சீரகம்,ரெண்டு ஸ்பூன் மிளகு,ஒரு டீஸ்பூன் சோம்பு, 6 ஏலக்காய், 10 கிராம்பு எல்லாவற்றையும் வர வருப்பாக வறுத்துக் கொள்ளவும். மிதமான தீயில் நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.

  2. 2

    வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு, மிக்ஸியில் மேற்கூறிய பொருட்களுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், மற்றும் ஒரு ஸ்பூன் சுக்குத்தூள் சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பவுடரை ஒரு ஏர் டைட் பாக்சில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்போது மின்ட் மசாலா பால் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் இரண்டர கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் கழுவி சுத்தம் செய்த புதினா இலைகளை போட்டு, சூடு பண்ணவும். லேசாக கொதிக்க தொடங்கியவுடன் 3 ஸ்பூன் அரைத்த பவுடரை சேர்க்கவும். அதனுடன் 2 ஸ்பூன் பொடித்த வெல்லம் கலந்து கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்த பிறகு அரை கப் பால் சேர்க்கவும். இவை அனைத்தையும் 2 நிமிடம் கொதிக்க விடவும். ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும்.பொதினா தலை சேர்த்திருப்பதால் வடிகட்டிக்கொள்ளவும். பொதினா சேர்க்கவில்லை என்றால் வடிக்க வேண்டாம்.

  4. 4

    இந்த பானத்தை குளிர்காலம், மழைக்காலம்,உடல்நிலை சரியில்லாதபோது, நோயெதிர்ப்பு சக்தி வேண்டும் பொழுது தயார் செய்து குடிக்கலாம். குழந்தைகள் முதல் வயதானவர் வரை இந்த பானத்தை குடிக்கலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes