கடலை பருப்பு, அகத்திக் கீரை மசியல் #book #nutrient1

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

அகத்திக் கீரையில் அதிக புரத சத்துள்ளதால் எலும்பும், சுண்ணாம்பு சத்து உள்ளதால் பல்லுக்கும் நல்லது. இரத்த அழுத்தம் குறையும். வாரம் ஒரு முறை சாப்பிடுவது நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

முப்பது நிமிடங்கள்
மூவருக்கு போதுமனது
  1. 1/2கப் கடலை பருப்பு
  2. 2கப் சுத்தம் செத்த கீரை
  3. 4பச்சை மிளகாய்
  4. 5சின்ன வெங்காயம்
  5. 1/2டீஸ் ஸ்பூன் சீரகம்
  6. உப்பு
  7. எண்ணை

சமையல் குறிப்புகள்

முப்பது நிமிடங்கள்
  1. 1

    முதலில் பருப்பை நன்கு கழுவி, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

  2. 2

    கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.பச்சை மிளகாய், வெங்காயத்தையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    வாணலியை சூடு செய்து எண்ணை, சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கொஞ்சம் வதக்கி பின்பு நறுக்கி வைத்துள்ள அகத்திக் கீரையை சேர்த்து வதக்கவும். இப்போது வேக வைத்துள்ள பருப்பு, வதக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து கொஞ்சம் நேரம் வேகவிடவும்.

  4. 4

    ஐந்து நிமிடங்கள் வெந்த பின் எடுத்து, கரண்டியால் நன்கு அழுத்தி கலக்குங்கள் (கரண்டியால் மசிக்கவும்). ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்க்கவும். இப்போது எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து கலந்து இறக்கவும்.

  5. 5

    இப்போது உங்களுக்கு சுவையான கடலைப் பருப்பு கீரை மசியல் சுவைக்கத் தயார்.

  6. 6

    **இது சாதம், சப்பாத்தி இரண்டுக்கும் பொறுத்தமானது. சமைப்பது மிக மிக சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes