செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி (Chettinadu style mutton gravy Recipe in Tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கி சிக்கன்
  2. 1டீஸ்பூன் சீரகம்
  3. 1டீஸ்பூன் சோம்பு
  4. 1பிரியாணி இலை
  5. 1டேபிள்ஸ்பூன் மிளகு
  6. 1/2கப் தேங்காய் துருவல்
  7. 1டீஸ்பூன் தணியா
  8. 1கப் வெங்காயம்
  9. 1கப் தக்காளி
  10. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
  11. 1டீஸ்பூன் மஞ்சள்தூள்
  12. உப்பு
  13. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சீரகம், மிளகு, சோம்பு, பிரிஞ்சி இலை, தணிய சேர்த்து வதக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும். மேலே சொன்ன மசாலாவுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதங்கியதும் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள்
    மற்றும் நாள் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும் அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    சிக்கன் வெந்தவுடன் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்து கொள்ளவும். பின் சிறிது நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes