எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர் பால்
  2. 2டே ஸ்பூன் கஸ்டர்டு பவுடர்
  3. 4டே ஸ்பூன் சுகர்
  4. 1 ஸ்பூன்வெண்ணிலா எசென்ஸ்
  5. ஜெல்லோ செய்ய
  6. 2 கிராம் அகர் அகர்
  7. 2டே ஸ்பூன் சீனி
  8. 1/2 கப் தண்ணீர்
  9. ரெட் கலர்
  10. ப்ளூ கலர்
  11. 1 ஸ்பூன் சப்ஜ விதை
  12. ஐஸ் கட்டி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அகர் அகருடன் தண்ணீர் சேர்த்து ஊறவிடவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து அதில் கஸ்டர்டு பவுடர் சேர்த்து கரைத்து வைக்கவும்

  3. 3

    அடுப்பில் பால் வைத்து நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் சீனி சேர்த்து கலக்கவும்.பின் கரைத்து வைத்த கஸ்டர்டு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்

  4. 4

    பின் இறக்கி வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    கஸ்டர்டு ஐஸ் கிரீம் செய்ய ஒரு பாதி கஸ்டர்டு மில்கை ஒரு பாத்திரத்தில் ஊத்தி பிரீசரில் 1 மணி நேரம் வைக்கவும்.1 மணி நேரத்தில் செட் ஆக ப்ரீஸரின் குளிரும் தன்மையை கூட்டி வைக்கவும்.மீதி பாதியை பிரிட்ஜ்யில் வைக்கவும்.

  6. 6

    சியா/சப்ஜ விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும்

  7. 7

    தண்ணீர் சூடு செய்து அதில் சீனி ஊற வைத்த அகர் அகர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

  8. 8

    ரெண்டு பாத்திரத்தில் ஊத்தி கலர் சேர்த்து செட் செய்யவும்.

  9. 9

    மிக்சியில் ஐஸ் கட்டி போட்டு பிரிட்ஜில் இருந்த கஸ்டர்டு மில்க் சேர்த்து அடித்து கொள்ளவும

  10. 10

    ஒரு கப்பில் ஜெல்லோ சேர்த்து அத்துடன் கஸ்டர்டு மில்க் ஊத்தி

  11. 11

    சியா/சப்ஜ விதைகள் சேர்த்து 1 மணி நேரம் பிரீசரில் வைத்த கஸ்டர்டு ஐஸ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes