#cookwithfriends பீட்ரூட் ஃபலூடா மில்க் ஷேக்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

#20 நிமிடங்கள்
இரண்டு பேர்
  1. தேவையானஅளவு பால்
  2. 4 ஸ்பூன் பீட்ரூட் சிறப்
  3. ஒரு ஸ்பூன் பீட்ரூட் பொடி (பீட்ரூட் அகர் அகர் செய்ய)
  4. மூன்று ஸ்பூன் சப்ஜா விதை
  5. தேவையானஅளவு அகர் அகர்
  6. நான்கு ஸ்பூன் பலுடா சேவ்

சமையல் குறிப்புகள்

#20 நிமிடங்கள்
  1. 1

    சப்ஜா விதையை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தேவையான அளவு அகர் அகர் எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி பீட்ரூட் கலர் ஹோம் மேட்) சேர்த்து செட் செய்து துண்டுகளாக்கவும். தேவையான அளவு ஃபலூடா சேவ் எடுத்து தண்ணீரில் வேகவைத்து தண்ணீரை வடித்து பலூடா செய்ய தயார் பண்ணவும்.

  2. 2

    பீட்ரூட் சிறப் மற்றும் ஹோம் மேடு பீட்ரூட் கலர்பொடி ஆகியவை தனியாக தயாரித்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் தயாரித்த பலுடா சேவை சேர்க்கவும். பிறகு ஊறிய சப்ஜா விதை களை சேர்க்கவும்.

  4. 4

    ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு பால் மற்றும் பீட்ரூட் சிரப் சேர்த்து அடித்துக் கொள்ளவும் இப்பொழுது பீட்ரூட் மில்க் ஷேக் தயார் இதனை கண்ணாடி டம்ளரில் சேவ்மற்றும் சப்ஜா விதைகள் உடன் ஊற்றவும். இதனுடன் தயாரித்து வைத்துள்ள பீட்ரூட் அகர் அகர் சேர்க்கவும்

  5. 5

    இப்பொழுது அருமையான சுவையான உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பீட்ரூட் பலுடா மில்க் ஷேக் தயார்.😋😋😋

  6. 6

    குறிப்பு: பீட்ரூட் சிறப் செய்ய: இரண்டு கப் துருவிய பீட்ரூட் 4 கப் சர்க்கரை நான்கு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியில் சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து இறக்கிவடிகட்டினால் பீட்ரூட் சிறப் தயார்

  7. 7
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes