செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பரிமாறுவது
  1. 500கிராம் நாட்டுக்கோழி
  2. 2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  3. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1 ஸ்பூன் மிளகு தூள்
  6. 1 ஸ்பூன் சீரகத்துள்
  7. 1ஸ்பூன் சோம்பு தூள்
  8. 1/2 ஸ்பூன் கரமசாலா தூள்
  9. 1 சிறியதுண்டு பட்டை
  10. 2 கிராம்பு
  11. 1 ஸ்பூன் சீரகம்
  12. 1 ஸ்பூன் சோம்பு
  13. 1பிரியாணி இழை
  14. 100 மில்லி நல்லெண்ணெய்
  15. 20 சிறியதுண்டு வெங்காயம்
  16. 2 தக்காளி
  17. 2 காய்ந்த மிளகாய்
  18. கறிவேப்பிலை
  19. கொத்தமல்லி இழை
  20. புதினா இழை
  21. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    நாட்டுக்கோழியை நல்லா கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி(5-7விசில்) வேகவைத்து இறக்கவும்.

  2. 2

    அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு சீரகம் பிரியாணி இழை காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை புதினா போட்டு தாளித்து இரண்டாக வெட்டி வைத்துள்ள சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து மஞ்சள் தூள் சோம்பு தூள் சீரகத்தூள் மிளகு தூள் மிளகாய் தூள் கரமாசலாதூள் சேர்த்து நன்றாக வதக்கி பின்பு தேவையான அளவு உப்பு கோழி வேகவைத்த தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து மிதந்து வ௫ம் வரை மிதமாக அடுப்பை வைக்கவும்

  4. 4

    பின்னர் வேகவைத்த நாட்டுக்கோழி போட்டு சுருள சு௫ள கிளறி விட்டு 5 நிமிடம் மிதமான அளவு தீயில் வைத்தி௫ந்தால் எண்ணெய் பிரிந்து மசாலா கோழியில் இறங்கி நன்றாக இ௫க்கும் கொத்தமல்லி இழை தூவி இறக்கவும் சாப்பிடரெடி சுவையான செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes