துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப் சாதம்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1/4 குடைமிளகாய்
  5. 1 பச்சைமிளகாய்
  6. 2 முட்டை
  7. 1 ஸ்பூன் பிரியாணிமசாலாதூள்
  8. 1 ஸ்பூன் கரமசாலாதூள்
  9. 1 ஸ்பூன் சிக்கன்மசாலாதூள்(தேவையானால்)
  10. 1 ஸ்பூன் மிளகு சீரகம் தூள்
  11. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  12. 2 ஸ்பூன் கடலெண்ணெய்
  13. 2 ஸ்பூன் தயிர்
  14. 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  15. 1 சிறியதுண்டு பட்டை
  16. 2 கிராம்பு
  17. 2 ஏலக்காய்
  18. புதினா
  19. கொத்தமல்லி இழை
  20. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடாயில் கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் கறிவேப்பிலை புதினா இலை சேர்த்து வெங்காயத்தை போட்டு வதக்கி இஞ்சிபூண்டு விழுது தக்காளி குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின்பு தேவையான அளவு உப்பு கரமசாலாதூள் பிரியாணிமசாலாதூள் சிக்கன்மசாலாதூள் சேர்த்து நன்றாக வதக்கி

  3. 3

    தயிர் எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும் கடலெண்ணெய் மேலே மிதந்து வ௫ம்

  4. 4

    சாதத்தை போட்டு நன்றாக மசாலா எல்லா சாதத்திலும் படும்படி கிளறி முட்டை 2 அல்லது 3 உடைத்து ஊற்றி மிளகுசீரகப்பொடி தூவி நன்றாக கிளறினால்

  5. 5

    ஈஸியா முட்டை பிரியாணி 10 நிமிசத்தில ரெடி நெய் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் சாப்பிடரெடி சுவையான முட்டை பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes