எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சின்ன வெங்காயம் - 20
  2. சிக்கன் - 1கிலோ
  3. பச்சை மிளகாய் -1
  4. காய்ந்த மிளகாய் - 2
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  6. கருவேப்பிலை - 3கொத்து
  7. சோம்பு - 1/2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  10. மல்லி தூள் - 1ஸ்பூன்
  11. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  12. மிளகு தூள் - 2 ஸ்பூன்
  13. கடலை மாவு - 1 ஸ்பூன்
  14. எண்ணெய் - தேவைக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கறியை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் எடுத்து கொண்டு காய்ந்ததும் சோம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இடித்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள கறியை சேர்த்து 5நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பின்னர் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். (தண்ணீர் சேர்க்க கூடாது). பின்னர் மூடி இட்டு 15நிமிடம் வேக விடவும். (இடை இடையே கிளறி கொள்ளுங்கள்). கறியிலிருந்து நீர் பிரிந்து கறி நன்கு வெந்த உடன் தீயை அதிக படுத்தி கறியில் உள்ள நீர் வற்றும் வரை கிளறவும்.

  4. 4

    பின் கறியில் அவரவர் சுவைக்கு ஏற்ப மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் 1 ஸ்பூன் கடலை மாவு தூவி கிளறவும். பின் 5 நிமிடம் வதக்கி கடலை மாவு பச்சை வாசம் போனவுடன் கருவேப்பிலை தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes