எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 வாழைக்காய்
  2. 2 ஸ்பூன் மிளகு
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. 1 ஸ்பூன் சோம்பு
  5. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  7. கறிவேப்பிலை
  8. பூண்டு 4
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    2 வாழைக்காய் நறுக்கி வேகவைத்து எடுத்து கொள்ளவும்.மிளகு, சோம்பு,சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்து கொள்ளவும்

  2. 2

    அதனை நன்கு மையமாக அரைத்து வைக்கவும். பின் கறிவேப்பிலை பூண்டு தட்டி எடுத்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,

  3. 3

    பின் வேக வைத்த வாழைக்காய் ஐ சேர்த்து கிளறவும்.பிறகு அதில் நாம் அரைத்து வைத்துள்ள மிளகு மசாலாவை சேர்த்து அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும்.வாழைக்காய் இல் மசாலா நன்கு சாரும் வரை சிம் இல் வைக்கவும்.

  4. 4

    தேவை கேற்ப எண்ணெய் ஊற்றி நன்கு சுருள வதக்கவும். வாழைக்காய் மசாலா சார்ந்தவுடன் அடுப்பை அணைக்கவும். மிகவும் சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வாழைக்காய் மிளகு வறுவல் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes