எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. மீல்மேக்கர் 50 கிராம்
  2. தக்காளி- 1
  3. வெங்காயம்-1
  4. பூண்டு - 5
  5. மிளகு - 2 ஸ்பூன்
  6. சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் கால் ஸ்பூன்,முந்திரிபருப்பு 5,
  7. மல்ல அரை ஸ்பூன்,தேங்காய் 5 ஸ்பூன்
  8. 3 ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம், சோம்பு,மல்லி எல்லாவற்றையும் போட்டு தாளிக்கவும்.பிறகு பச்சை மிளகாய்,முந்திரிப்பருப்ப,தேங்காய் போட்டு வறுத்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மீல்மேக்கரை சுடுதண்ணீரில் 10நிமிடம் போட்டு ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் வாணலை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும் பிறகு கருவேப்பிலை தக்காளியைப் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். தக்காளி வெங்காயம் வதங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் போட்டு வதக்கவும் பிறகு ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.

  5. 5

    ஒரு கொதி வந்தவுடன் மீல்மேக்கரை அதில் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  6. 6

    சுவையான மீன் மேக்கர் மிளகு குருமா ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes