தேவையான பொருட்கள்

  1. 10 முந்திரி
  2. 1 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1 பட்டை
  6. 2 லவங்கம்
  7. 1 ஏலக்காய்
  8. 1பிரிஞ்சி இலை
  9. 1 ஸ்பூன் சீரகம்
  10. 2 பச்சை மிளகாய்
  11. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1 ஸ்பூன் வர மிளகாய் தூள்
  13. 1 ஸ்பூன் மல்லி தூள்
  14. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  15. தேவையானஅளவு உப்பு
  16. 3 முந்திரி அரைக்க
  17. எண்ணெய்
  18. மல்லித்தழை
  19. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் நெய் சேர்த்து முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு தக்காளியை முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும். ஆரிய பிறகு நைசாக அரைத்து கொள்ளவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் சீரகம் சேர்த்து பின் அரைத்த விழுதை சேர்த்து கலக்கவும்.

  5. 5

    பின் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து 2 கொதி வந்தவுடன் வறுத்த முந்திரி மல்லித்தழை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.சூடான முந்திரி கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes