வாழைக்காய் மிளகு பொடிமாஸ்

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. வாழைக்காய் - 1
  2. சின்ன வெங்காயம் - 5
  3. பச்சை மிளகாய் - 1
  4. கருவேப்பிலை - 1 கொத்து
  5. மிளகுத் தூள் -1ஸ்பூன்
  6. கடுகு - 1/2ஸ்பூன்
  7. உளுந்து -1/2ஸ்பூன்
  8. தேங்காய்த்துருவல் -5ஸ்பூன்
  9. எண்ணெய் -2ஸ்பூன்
  10. உப்பு - தேவையான அளவு
  11. கொத்தமல்லித்தழை(optional)

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயை இரண்டாக, அல்லது மூன்றாக, கட் பண்ணி,தண்ணீரில் வேக வைக்கவும்,(அரை வேக்காடாக)

  2. 2

    வேகவைத்த வாழைக்காயை தோலை நீக்கி விட்டு துருவி கொள்ளவும்...(அரை வேக்காடாக இருந்தால்தான் துருவ வரும்)..

  3. 3

    ஒரு கடாயில்,2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,கடுகு, உளுந்து,போட்டு தாளித்து, பிறகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,கருவேப்பிலை, போட்டு வதக்கிக் கொள்ளவும்..

  4. 4

    பின்னர் துருவிய வாழைக்காயை,அதில் சேர்த்து வதக்கவும், அதனுடன் 1 ஸ்பூன் மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு,சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்...

  5. 5

    அதனுடன் தேங்காய் துருவலை,சேர்த்து கிண்டி இறக்கவும்.கடைசியாக கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளலாம்.. வாழைக்காய் மிளகு பொடிமாஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes